எம்.பி ஜோதிமணியையும், செந்திலையும் கைது பண்ணுங்க..!! வைரமுத்துகிட்ட அது இருக்கா..?? எச். ராஜா தாறுமாறு ...!!

Published : Feb 16, 2020, 04:45 PM IST
எம்.பி ஜோதிமணியையும், செந்திலையும்  கைது பண்ணுங்க..!! வைரமுத்துகிட்ட அது இருக்கா..??  எச். ராஜா தாறுமாறு ...!!

சுருக்கம்

இந்நிலையில் போராட்டக்காரர்களை தாக்கக் கூடாது துன்புறுத்தக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து தூண்டி விடுகிறார்.  ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கதக்க விதத்தில் அவமதித்தவரிடம் நேர்மை இருக்குமா.?  என  எச். ராஜா பதிவிட்டுள்ளார் .

சென்னையில் நடந்த போராட்டத்தில் ஒருவர்  கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திமுக எம்பி செந்தில் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வலியுறுத்தியுள்ளார் .  சென்னையில்  நேற்று முன்தினம் இந்திய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள்  ஒன்றிணைந்து சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தினர் .  அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது . 

அப்போது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் ,  அப்போது போலீசார் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக செய்திகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது  இந்த தகவல் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி ஆங்காங்கே போராட்டங்களும் சாலை மறியல்கள் நடந்தன .  இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள எச். ராஜா சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லீம் வன்முறையாளர்கள் துணை கமிஷனர் விஜயகுமாரி,   ஆய்வாளர் ராஜ்குமார் ,  பெண் காவலர்கள் ஆகியோரை தாக்கியுள்ளனர் . மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை  சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே விசுவநாதன் மருத்துவமனையில் சென்று பார்வையிட்டார் .  

வன்முறையாளர்கள் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது .  ஆனால் அவர்கள் மீதான நடவடிக்கை.?  அதேபோல் சிஏஏ போராட்டத்தில் காவல்துறை நடவடிக்கையில் ஒருவர் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பிய காங்கிரஸ் எம்பிக்கள் , ஜோதிமணி,  திமுக எம்பி செந்திலையும்  உடனடியாக கைதுசெய்ய  வேண்டும் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் முஸ்லீம் வன்முறையாளர்கள் காவல்துறையினரை தாக்கியுள்ளனர் .  இந்நிலையில் போராட்டக்காரர்களை தாக்கக் கூடாது துன்புறுத்தக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து தூண்டி விடுகிறார்.  ஆண்டாள் நாச்சியாரை அருவருக்கதக்க விதத்தில் அவமதித்தவரிடம் நேர்மை இருக்குமா.?  என  எச். ராஜா பதிவிட்டுள்ளார் .

PREV
click me!

Recommended Stories

Poes Garden: 'அம்மா' வீட்டுக்கு வர்றாரா தளபதி? ஜெயலலிதா பங்களாவில் விஜய்... பரபரக்கும் சென்னை!
TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?