சீறிப்பாய 700 காளைகள்... திமிலை பிடித்து திமிரை அடக்க 936 வீரர்களும்... கோலாகாலத்தில் பாலமேடு...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 16, 2020, 11:30 AM IST
Highlights

இப்போட்டியில் சீறிப்பாய  700க்கும் மேற்பட்ட காளைகள் 936 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டில் காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படுகின்றன.

விறு விறுப்புடன் தொடங்கிய மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில்  சீறி எழுந்த ஜல்லிகட்டு காளைகளை காளையர்கள் மல்லுகட்டி அடக்கி வருகின்றனர்.   உலக புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிகட்டு விறுவிறுப்புடனும் ஆரவாரத்துடனும் தொடங்கியது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் T. G. வினய், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

இப்போட்டியில் சீறிப்பாய  700க்கும் மேற்பட்ட காளைகள் 936 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டில் காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படுகின்றன. பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ குழுக்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே காளைகள் அனுமதிக்கப்படுகின்றன. ஒரு சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் களமிறக்க படுகிறார்கள். பாதுகாப்பு நலன் கருதி ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. மதுரை சிவகங்கை திருச்சி உள்ளிட்ட சுற்றுப் பகுதியில் இருந்து காளைகள் கலந்து கொண்ட வண்ணம் உள்ளது இப்போட்டியில் மதுரை , திருச்சி , கோவை , ராமநாதபுரம் , புதுக்கோட்டை , நெல்லை ,திருப்பூர்,  சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த காளைகளும் பங்கேற்க வருகை தந்துள்ளன . அனுமதி சீட்டு பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு முன்னதாக போதை வஸ்துகள் மற்றும் உடல் தகுதி குறித்த மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள்.

 

இந்தாண்டு முறைகேடுகளை தடுக்க காளைகளுக்கான அனுமதி அட்டையில் பார் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  போதை வஸ்துகள் பயன்படுத்தி இருக்க கூடாது என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறும் வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதம் சுழற்சி முறையில் 75 வீரர்கள் களமிறங்கபடுவார்கள் ஒவ்வொரு சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் காளைகளை பிடிக்கும் வீரர்களுக்கு அடுத்தடுத்த சுற்றுலும் களமிறங்கும் வாய்ப்பளிக்கப்படும். 

click me!