
மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் உரிய அனுமதி இன்றி வெளிநாட்டிற்கு செல்வது தடை விதிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். நாடு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் பன்னாட்டு பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென அவர் இவ்வாறு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேசிய சட்ட மன்ற உறுப்பினர் நியாய் பத்யானா சமீபத்தில் கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டுக்கு சென்றது மற்றும் அவரது பயணம் குறித்து சர்ச்சை எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்து தானே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாத போது தனது அமைச்சரவையில் சகாக்களும் வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென அவர் வெளியிட்டுள்ளார். அப்போது தகவல்தொடர்புத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி பேசுகையில் அமைச்சர்களை காட்டிலும் எம்எல்ஏக்கள் மற்றும் செனட்டர்கள் அதிக அளவில் வெளி நாடுகளுக்கு பயணம் செய்வதாக குற்றம் சாட்டினார்.அதற்கு பதிலளித்து பேசிய இம்ரான்கான் இனி அரசாங்கத்தின் எம்எல்ஏக்கள் மற்றும் செனட்டர்கள் கூட வெளிநாட்டுப் பயணிகளுக்கு செல்லக்கூடாது என்று கூறினார்.
அரசாங்க விவகாரங்களுக்கே முதலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். குறிப்பாக பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இது போன்ற பயணங்களை தவிர்க்க வேண்டுமென்றும் அவர் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், கோவிட் -19 இன் ஓமிக்ரான் திரிபு குறித்து பீதியடைந்துள்ள பாகிஸ்தான், உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு புதிய தடுப்பூசி திட்டத்தையும் அறிவித்துள்ளது, இதன் கீழ் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்படும் என்று அவர்அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.