Omicron: அட கடவுளே.. இந்தியாவையும் விட்டு வைக்கல ஓமைக்ரான் வைரஸ்.. அதிர்ச்சியில் மக்கள்.

By Ezhilarasan BabuFirst Published Dec 2, 2021, 5:56 PM IST
Highlights

அவர்களுக்கு லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது, பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்,  அவர்களுக்கு தொடர்பில் இருப்பவர்களையும் கண்டறிய தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, 

தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு  ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது என்றும், அதனால் அதிக பாதிப்பு நேரிடலாம் என அனுமானிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருவருக்கு அத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 150க்கும் அதிகமான நாடுகளை கபளிகரம் செய்துள்ளது. இதுவரை இந்த வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் இன்னும் இந்த வைரஸில் இருந்து மீண்டு வர முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக வைரஸ் தொற்று  கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் புதிய கொரோனா வைரஸ் பிறழ்வு காரணமாக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12க்கும் அதிகமான நாடுகளில் ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்றும், இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த வைரஸ் இந்தியாவுக்குள் பரவி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்துள்ளது. இதனால் சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்துள்ள இருவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், இந்தியாவில் இரண்டு பேருக்கும் ஒமைக்ரான் கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்தவர்கள் ஆவர். 66 வயது மற்றும் 46 வயதான ஆண்கள் இரண்டு பேருக்கு இந்த தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு நடந்த பகுப்பாய்வு பரிசோதனையில் இருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியிருக்கிறது. 

அவர்களுக்கு லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது, பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்,  அவர்களுக்கு தொடர்பில் இருப்பவர்களையும் கண்டறிய தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அவர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இதனால் யாரும் பீதியடைய தேவையில்லை, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் போதுமானது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவியிருப்பது குறித்து பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒமைக்ரான் 29 நாடுகளில் பரவியுள்ள நிலையில் மொத்தம் 373 பேருக்கு இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.  ஒமைக்ரான் வைரஸ் பரவிய உலகம் நாடுகள் அனைத்திலும், கடுமையான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும், மேலும் தொற்று குறித்து ஆதாரங்கள் பகுப்பாய்வு  செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளது. 

click me!