இந்தியாவை பழிவாங்க துடிக்கும் பாகிஸ்தான்.. கில்கிட்-பால்டிஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து, வம்பிழுக்கும் இம்ரான்கான்

By Ezhilarasan BabuFirst Published Nov 3, 2020, 5:35 PM IST
Highlights

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து  இந்தியாவையும் பழிவாங்கும் நோக்கிலேயே கில்கிட்- பால்டிஸ்தான் பகுதியை சீனாவுக்கு தாரைவார்க்க முயற்சித்ததுடன், தற்போது அப்பகுதிக்கு தற்காலிக சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என இம்ரான் அறிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

கில்கிட்-பால்டிஸ்தான் முழுக்க முழுக்க இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதில் சட்டவிரோதமாக பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் செல்லாது எனவும், அதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. சமீபத்தில் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதிக்கு சென்ற பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான் கான் gilgit-baltistan பிராந்தியத்திற்கு தற்காலிகமாக மாகாண அந்தஸ்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தபோதே அதன் ஒருங்கிணைந்த பகுதியான gilgit-baltistan உள்ளிட்ட பகுதிகள், காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப்பட்டது. அது சட்ட ரீதியாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  காஷ்மீரை gilgit-baltistan ஒட்டி உள்ளதால் அப்பகுதிகள் தங்களுக்கே சொந்தம் என பாகிஸ்தான் உரிமைகொண்டாடி வருகிறது. 

அதேநேரத்தில் அப்பகுதிகளை  சீனாவுக்கு தாரை வார்க்க பாகிஸ்தான் முயற்சித்தது ஆனால் அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தற்போது அது  கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்கிட்- பால்டிஸ்தான் பகுதிக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் gilgit-baltistan பிராந்தியத்திற்கு தற்காலிகமாக மகாண அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியா gilgit-baltistan பகுதியில் சட்டவிரோதமாக பாகிஸ்தான் செய்யும் நடவடிக்கைகள் இந்தியாவால் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் தனது சட்டவிரோத நடவடிக்கைகளை கைவிட்டு அப்பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:  1947 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தின்படி கில்கிட்- பால்டிஸ்தான் பிராந்தியம் ஜம்மு காஷ்மீரின் சட்டப்பூர்வமான ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.  எனவே இந்திய பிராந்தியங்களின் அமைப்பை மாற்றுவதற்கு பதிலாக அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து உடனடியாக பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.  பிராந்திய விவகாரத்தில் பாகிஸ்தான் எல்லை மீறக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.  

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து  இந்தியாவையும் பழிவாங்கும் நோக்கிலேயே கில்கிட்- பால்டிஸ்தான் பகுதியை சீனாவுக்கு தாரைவார்க்க முயற்சித்ததுடன், தற்போது அப்பகுதிக்கு தற்காலிக சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என இம்ரான் அறிவித்துள்ளதாக கருதப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை கில்கிட்- பால்டிஸ்தானின் 73 ஆவது சுதந்திர தின  நிகழ்வில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் gilgit-baltistan மக்களின் நீண்டகால கனவை நிறைவேற்ற போகிறேன், அத்துடன் இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பொருளாதார  தொகுப்பு நிதி உதவிகளையும் வழங்க பரிசீலித்து வருகிறேன், இந்த பிராந்தியத்திற்கு சிறப்புமாகாண அந்தஸ்தையும் வழங்க உள்ளேன்  என அவர் பேசியதுடன், அப்போது பிரதமர் மோடியையும்  கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, இந்தியாவின் நரேந்திர மோடி அரசு வெறும் இந்துத்துவா சிந்தனை மட்டுமே நம்புகிறது. அந்த சித்தாந்தத்தின் பெயரால் அப்பாவி காஷ்மீரிகள் கொல்லப்படுகிறார்கள் என்றும் இம்ரான் கான் விமர்சித்துள்ளார். 

 

click me!