வேல் யாத்திரையில் கலவரம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டம்? பகீர் கிளப்பும் எல்.முருகன்..!

By vinoth kumarFirst Published Nov 3, 2020, 4:35 PM IST
Highlights

வேல் யாத்திரையின் இறுதி நாளில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க வாய்ப்புள்ளது என எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

வேல் யாத்திரையின் இறுதி நாளில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க வாய்ப்புள்ளது என எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இன்று திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நடைபெற உள்ள வேல்யாத்திரை மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அப்போது, பாஜக நடத்தும் வேல்யாத்திரை குறித்து ஆளுநரிடம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விரிவாக எடுத்துக் கூறியதாகவும், யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் தடை கேட்டு அரசியல் செய்வது பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளார். வேல் யாத்திரை நடைபெற தமிழக அரசுக்கு ஆளுநர் தரப்பில் இருந்து உரிய அழுத்தம் தேவை என்பதையும் முருகன் எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது.  

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்;- தமிழகத்தில் பாஜக நடத்த உள்ள வேல் யாத்திரையில் கலவரம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். வேல் யாத்திரையின் இறுதி நாளில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!