இந்தியாவிக்குள் நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்கள்... குஜராத்தை சுக்கு நூறாக்க சதி..?

Published : Aug 29, 2019, 05:28 PM IST
இந்தியாவிக்குள் நுழைந்த பாகிஸ்தான் கமாண்டோ வீரர்கள்... குஜராத்தை சுக்கு நூறாக்க சதி..?

சுருக்கம்

பாகிஸ்தான் கமாண்டோக்கள் எல்லைத் தாண்டி, உயரடுக்கு எச்சரிக்கை பகுதியான குஜராத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   

பாகிஸ்தான் கமாண்டோக்கள் எல்லைத் தாண்டி, உயரடுக்கு எச்சரிக்கை பகுதியான குஜராத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

கட்ச் பகுதி மூலம், கடல் மார்க்கமாக பாகிஸ்தான் கமாண்டோஸ் நுழைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் அமைதியைக் குலைக்கவோ அல்லது தீவிரவாத தாக்குதல் நடத்தவோ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதானி துறைமுகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலோர காவல் படை, பாகிஸ்தான் கமாண்டோஸ் கட்ச் வளைகுடா மூலம் நுழைந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. நீருக்கு அடியில் தாக்குதல் நடத்தும் வகையில் அவர்களுக்குப் பயிற்சி இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முந்த்ரா துறைமுகத்தில் இருக்கும் அனைத்து கப்பல்களும், பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

 

துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கைத் தகவல்படி, அதிகபட்ச தயார் நிலை மற்றும் உஷார்நிலையை கடைபிடிப்பது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான பகுதிகளில் அதிக பாதுகாப்பு வீரர்களை அமர்த்துவது, சந்தேகிக்கும்படி உள்ள நபர்களை கண்காணிப்பது, கடலையொட்டி ரோந்துப் பணிகளை முடுக்கிவிடுவது, கடற்கரைக்கு அருகில் இருக்கும் அனைத்து அலுவலகம் மற்றும் வீடுகளில் உள்ள வாகனங்களை சோதனையிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என துறைமுக நிர்வாகம் எச்சரித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

மோடிக்காக காரை ஓட்டிய முஹமது நபியின் 42 வது நேரடி தலைமுறை ஜோர்டான் இளவரசர்..!
EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு