மதுரை சமூக சேவகி சின்னப் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது !! முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெரிதும் மதித்த பெண் !!

By Selvanayagam PFirst Published Jan 26, 2019, 5:19 AM IST
Highlights

கடந்த 2001 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, தனது வயது மற்றும் பதவியைப் பொருட்படுத்தாது ஒரு பெண்ணின் காலில் விழுந்து வணங்கியது அனைவருக்கும் நினைவிருக்கும். ஷக்தி புரஷ்கார் விருது பெற்ற அந்த பெண் மதுரை சமூக சேவகி சின்னபிள்ளை. அவருக்கு தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், சின்னப்பிள்ளை என்ற பெண்ணின்  காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் யாராலும் முடியாது. சின்னப்பிள்ளை மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார்.

பன்னிரெண்டு வயதில் சின்னப்பிள்ளைக்கும் பில்லுசேரிப் பெருமாளுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழுந்தைகள் பிறந்தன.

சின்னப்பிள்ளை ஆனால் கணவர் பெருமாள் தீராத நோயினால் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார். அப்போது தந்தையைம் இழந்த சின்னப்பிள்ளை கூலி வேலை செய்து குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றினார்.

இந்நிலையில்தான் இன்றளவும் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருப்பினும், கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார் சின்னப்பிள்ளை.

இதனால் தமிழகம் முழுக்க பிரபலமானார் சின்னப்பிள்ளை. இதைத்தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில், ஷக்தி புரஷ்கார் விருது சின்னப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது.

முனனாள் பிரதமர்  வாஜ்பாய் இந்த விருதினை களஞ்சியம் சின்னப்பிள்ளை வழங்கினார். மேடையில் விருதை வழங்கிய வாஜ்பாய் திடீரென அவரை உற்றுப்பார்த்தப்படியே தன்னைவிட இளையவரான சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

அதிர்ந்த அரங்கம் இதனால் பதறிப்போன சின்னப்பிள்ளை, வாஜ்பாயின் கைகளை பற்றியதோடு அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இதன் மூலம் பிரபலம் ஆன மதுரை சின்னப்பிள்ளைக்கு தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதனை அறிவித்தார்.

click me!