மோகன் லால் பிரபு தேவா உட்பட 9 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Jan 26, 2019, 6:00 AM IST
Highlights

திரையுலகைச் சேர்ந்த  நடிகர் மோகன் லால், பிரபு தேவா, சங்கர் மகாதேவன் உட்பட 9 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போல் பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தினவிழா கொண்டாடப்படும் நிலையில், மூவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 4 பேருக்கு பத்ம விபூஷண் , 14 பேருக்கு பத்ம பூஷண், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் என 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பாரத ரத்னா

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

நானாஜி தேஷ்முக் ( ஜனசக்தி தலைவர் மறைவு )

பூபன் ஹசாரிகா சானா (கவிஞர் மறைவு )

பத்ம விபூஷன் விருதுகள்

நாட்டுப்புற கலைஞர் தீஜன்பாய்.
டிஜிபோட்டி அதிபர் இஸ்மாயில் ஒமர் 
எல்.என்.டி. சேர்மன் ஏ.எம்.நாயக்
எழுத்தாளர் பல்வந்த் முரேஷ்வர் புரந்தரே

பத்ம பூஷன் விருதுகள்

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன்
மறைந்த எழுத்தாளர் குல்தீப் நாயர்
முன்னாள் சி.ஏ.ஜி. தலைவர் வி.கே.சுங்குலு
முன்னாள் லோக்சபா துணை சபாநாயகர் கரிய முண்டா.
அகாலிதளம் தலைவர் தீந்ஷா.
மலையேற்ற வீரர் பச்சேந்திரபால்.
லோக்சபா எம்.பி. நாராயண யாதவ்
நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 14 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் வழங்கப்படுகிறது.

பத்மஸ்ரீ விருதுகள்

குத்துச்சண்டை வீரர் பஜ்ரங்பூனியா
மதுரை சமூக சேவகி சின்னப்பிள்ளை
இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்
நடிகர் பிரபு தேவா
டாக்டர் ஆர்.பி. ரமணி
டிரம்ஸ் சிவமணி
நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டிய கலைஞர்)
பங்காரு அடிகளார்
கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்


மறைந்த நடிகர் காதர் கான்
முன்னாள் தூதரக அதிகாரி எஸ்.ஜெய்ஷங்கர்
பாட்மின்டன் வீரர் சரத் கமல்
கால்பந்து வீரர் சுனில் சேத்ரி
நடிகர் மனோஜ் பாஜ்பாய்
டாக்டர் ராமசாமி வெங்கடசாமி
மூத்த வழக்கறிஞர் ஹர்விந்தர் சிங் புல்கா

ஷாதப் முகம்மது
கபடி வீர் அஜய் தாக்கூர் உள்ளிட்ட 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!