கோகுல இந்திராவைத் தொடர்ந்து வளர்மதிக்கு சாட்டையடி..! - கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்...

First Published Aug 28, 2017, 5:15 PM IST
Highlights
Pa. Valarmathi Remove - TTV Dinakaran


அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், கட்சி பொறுப்பில் இருந்து சிலரை நீக்கியும் சிலரை நியமித்தும் வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கியிருந்தார். இந்த நிலையில்,  இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து பா. வளர்மதி இன்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

அதேபோல், சைதை துரைசாமியும், அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளர். நீலகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஆர்.அர்ஜூன் நீக்கம் செய்யப்பட்டும் எஸ். கலைவாணன் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா ரிவிட முன்னேற்றக் கழக (அம்மா) துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து பலரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அணிகளாக பிளவடைந்த அதிமுகவில், சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, சசிகலா அணியில் இருந்து கோகுல இந்திரா எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். 

மறைந்த ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும், கோயில்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவதும், அவரின் மறைவுக்குப் பிறகு, சசிகலாவுக்காக செயல்பட்டும் வந்தார். இந்த நிலையில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திரா கடந்த சில தினங்களுக்கு முன்பு நீக்கப்பட்டிருந்தார்.

டிடிவி தினகரன், கடந்த சில நாட்களாக, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட சிலரை விடுவித்தும், அப்பதவிக்கு புதியவர்களை நியமித்தும் வருகிறார்.

இந்த நிலையில், அதிமுக இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து பா. வளர்மதி நீக்கப்பட்டுள்ளார். 

ஜெ. மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர் பா. வளர்மதி. அண்மை காலமாக பா. வளர்மதி, எடப்பாடி அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருந்து பா. வளர்மதி நீக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், சைதை துரைசாமியும், அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளர். நீலகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஆர்.அர்ஜூன் நீக்கம் செய்யப்பட்டும் எஸ். கலைவாணன் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

click me!