உரிமை குழு கூட்டம் - திமுக எம்.எல்.ஏக்கள் வருகை...!!!

 
Published : Aug 28, 2017, 04:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
உரிமை குழு கூட்டம் - திமுக எம்.எல்.ஏக்கள் வருகை...!!!

சுருக்கம்

DMK MLAs Periyakuruppan Sundar Madivanan Ragupathy Ravichandran have come to participate in the assembly meeting.

சட்டப்பேரவை உரிமைக்குழு கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏக்கள் பெரியகருப்பன், சுந்தர், மதிவாணன், ரகுபதி, ரவிச்சந்திரன் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். 

சில நாட்களுக்கு முன்பு பான், குட்கா  அதிபர்களிடம்  அமைச்சர் விஜய பாஸ்கர் , ஐபிஎஸ் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் உள்ளிடோர் லஞ்சம் வாங்கியதாக ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியாகியது.

ஆனால் தமிழக அரசு இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைதொடர்ந்து இதுகுறித்து நீதிமன்றங்களில் எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

இதைதொடர்ந்து சென்னையில் எங்கெல்லாம் குட்கா விற்கப்படுகிறது என ஆய்வு செய்து புகைப்படங்களுடன் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.

மேலும் பெண்கள் முதல் குழந்தைகள் வரை குட்கா விற்க உபயோகப்படுத்தப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடை செய்யப்பட்ட குட்காவை எதிர்கட்சி தலைவர் சட்டப்பேரவைக்கே எடுத்து வந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இது அவர்களுக்கு எங்கே கிடைத்தது என கேள்வி எழுப்பினார்.
மேலும் இதுகுறித்து பேசிய சபாநாயகர் தனபால் எதிர்கட்சிகளின் செயலை உயர்மட்ட விசாரணைக்கு அனுப்புவோம் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இதுகுறித்து உயர்மட்ட குழு விசாரணை பொள்ளாட்சி ஜெயராமன் தலைமையில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக திமுக எம்.எல்.ஏக்கள்  பெரியகருப்பன், சுந்தர், மதிவாணன், ரகுபதி, ரவிச்சந்திரன் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!