அமெரிக்காவில் கருப்பினம்... இந்தியாவில் தலித்... மூச்சுமுட்ட கொந்தளிக்கும் பா.ரஞ்சித்..!

By Thiraviaraj RMFirst Published Jun 1, 2020, 1:12 PM IST
Highlights

அமெரிக்காவில் கருப்பினர்களுக்கும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராகவும் போராட்டங்களும், வன்முறையும் தொடர்ந்து நடைபெற்று வருவதை தடுக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
 

அமெரிக்காவில் கருப்பினர்களுக்கும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராகவும் போராட்டங்களும், வன்முறையும் தொடர்ந்து நடைபெற்று வருவதை தடுக்க வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 25ம் தேதி இன வெறி பிடித்த வெள்ளை நிற போலீஸ் அதிகாரியால் ஜார்ஜ் ஃப்ளாய்டு என்பவர் கொல்லப்பட்டதற்கு இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டு  காவல்துறை அதிகாரி ஒருவரால் தனது முட்டிக்காலால் நசுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜார்ஜ் ஃப்ளாய்டு போல பல மனிதர்கள், இன வெறி பிடித்த போலீஸ்காரர்களால் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த முறை ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்றும் அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

பிரபலங்கள் கண்டனம் ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அப்படியே வெளியாகி வைரலானது. அந்த வீடியோவை பார்த்து பதபதைத்துப் போன பல பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ள கண்டனத்தில், ’’ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு மூச்சு விட முடியாமல் இன வெறி பிடித்த அந்த அதிகாரி தனது முட்டிக்காலை வைத்து கழுத்தை நெரித்துக் கொன்றான். ஆனால், நம்மால் மூச்சு விடுகிறது. இந்த அநீதி செயலுக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம். அமெரிக்காவில் கருப்பினர்களுக்கும், இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராகவும் போராட்டங்களும், வன்முறையும் தொடர்ந்து நடைபெற்று வருவதை தடுக்க வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!