
அரசியல்வாதியின் வீடுகளில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை ரெய்டு என்று ஒன்று நடந்துவிட்டால் போதும். புரூனே மன்னனுக்கு அடுத்த பணக்காரர் அந்த நபர்தான் என்கிற ரீதியில் நம்மாளுங்க ஒரு சொத்து லிஸ்டை கிளப்பிவிடுவது வழக்கம். ஊட்டி, கொடைக்கானலில் எஸ்டேட்டில் ஆரம்பித்து சுவிஸ் வங்கி கணக்கு வரை என்னவோ அந்த புள்ளிக்கான ஆட்டிடர்களே இவர்கள்தான் என்கிற ரேஞ்சுக்கு பலப்பல வகையான சொத்துக்களை புள்ளிவிபரமாக போட்டுத்தாளிப்பார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன் ரெட்டி வீட்டில் ரெய்டுக்கு பிறகு அந்த ஆளை ரொட்டியாக்கினார்கள். ராம மோகன்ராவை ராவி எடுத்தார்கள். அடுத்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரை விரட்டிவிரட்டி வெளுத்துவிட்டு அண்ணன் சரத்குமார், அக்கா ராதிகாவின் சொத்துக்களாக சென்னையில் பாதியை பட்டா போட்டு கொடுத்தார்கள்.
இப்போது இவர்களின் கைகளில் பச்சைப் புல்லாக கிடைத்திருக்கிறார் ப.சிதம்பரம். வைக்கோல் ஆகும் வரை அவரை ‘வெச்சு செய்வார்கள்’. அந்த வகையில் ப.சிதம்பரத்தின் சொத்துக்களாக வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் ஒரு சொத்துப் பட்டியல் சொக்க வைக்கிறது. இதெல்லாம் உண்மையா அல்லது பொய்யா என்று சிதம்பரம்தான் தனது சன்னமான குரலில் சதக் சதக் வார்த்தைகளை போட்டு விளக்க வேண்டும். ஏதோ நமக்கு கிடைத்தவற்றை நாலு பேருக்காக பகிர்கிறோம் இங்கே.
Read more Read more...என்று விரிந்து கொண்டே போகும் அந்த விபரங்களை விளக்கிக் கொண்டே போனால் சிதம்பரம் வீட்டு வாசல் வரை போய் நிற்கும். எனவே அதில் சில சாம்பிள்கள் இதோ...
* பிரிட்டனில் 88 ஏக்கர். (பிரிட்டன்ல எண்பத்து எட்டு என்ன, எட்டாயிரத்து எட்டு ஏக்கரே இருக்கும் . ஆனால் சிதம்பரத்துக்கு இருக்குதா?)
* ஆப்பிரிக்காவில் 3 திராட்சைத் தோட்டம் + குதிரைப்பண்ணைகள். (ஏனுங்க திராட்சை தோட்டத்து கூடவே குதிரைப்பண்ணையை வெச்சா குதிரைங்க அதை தின்னுடாதா?)
* இலங்கையில் 3 ரிசார்ட்டுகள். இலங்கையில் உள்ள பிரபல சுற்றுலா நிறுவனமான ‘லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்’_ன் பெரும்பாலான பங்குகள் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது. (வாங்குறதே வாங்குனீங்க முழுசா வாங்குனா என்னாங்க பாஸ்?)
* பார்சிலோனாவில் (ஸ்பெயின்) 4 ஏக்கரில் 11 டென்னிஸ் கோட்களோடு டென்னிஸ் அகடெமி (அப்ப அடுத்த ஒலிம்பிக்ஸ்ல ஸ்பெயின் தங்கத்தை வெல்லும்டா! வெல்லும்டா! வெல்லும்டா!)
* துபாய், பிரான்ஸில் நிறைய முதலீடுகள். பல லட்சம் கோடிகளில். (யோவ் அதெல்லாம் ஷேக்கு பணமா இருக்க போவுது. அதுல கைய வெச்சா நடு ரோட்டுல ஜட்டியோட நிக்க வெச்சு ’அங்கே’யே கல்லெறிவாய்ங்க.)
* லண்டன், துபாய், சவுத் ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் முறைகேடாக பணம் முதலீடு செய்துள்ளார். இந்த முதலீடுகள் அனைத்தும் ஏர்செல் _ மேக்ஸிஸ் வர்த்தகம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்கு பிறகே நடைபெற்றுள்ளது. (அடேய் அப்ரசண்டிகளா 14 நாடுகள்ள பல லட்சம் கோடி முதலீடுன்னு சொல்றீங்களே, ப.சி. நிதியமைச்சரா இருந்து கரன்ஸி அச்சடிக்கவா செஞ்சாரு?)
* இங்கிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பவுண்ட் மதிப்பிலான சொத்து கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலமாக வாங்கப்பட்டுள்ளது. (அடேய், கார்த்தியின் நிறுவனம் வாங்கின இந்த சொத்து கார்த்திக்கு தெரியுமாடா?)
* ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பணியாற்றிய காலத்தில் கார்த்த் சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார். (போடாங்...! எங்க ஊரு சோனமுத்து பஞ்சாயத்து கவுன்சிலரா இருந்தப்ப அவன் பையன் பஞ்சாயத்தையே வாங்கிட்டாண்டா).
....இப்படி இன்னமும் தொடர்கிறது அந்த சொத்துப் பட்டியல். ஆனால் நம்மால் ம்ம்ம்முடியல!
ஏங்க ப.சி சார் மத்திய அரசு என்ன பண்ணினாலும் பேசுறதையும், எழுதுறதையும் நிறுத்தவே மாட்டேன்னு சொல்றீங்களே! வாட்ஸ் ஆப்ல வரிசைகட்டி நிக்குற இந்த சொத்து விபரங்களை பத்தியும் கொஞ்சம் பேசுங்களேன்.