"அமாவாசை இருட்டில் பெருச்சாளி செல்வதெல்லாம் பாதைதான்" - ஓபிஎஸ் அணியினரை கலாய்த்த ஜெயகுமார்

 
Published : May 17, 2017, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
"அமாவாசை இருட்டில் பெருச்சாளி செல்வதெல்லாம் பாதைதான்" - ஓபிஎஸ் அணியினரை கலாய்த்த ஜெயகுமார்

சுருக்கம்

jayakumar criticizing panneerselvam team

ஓபிஎஸ் அணியினர்தான் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடுவதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயகுமார், அவர்கள் தங்கள் இஷ்டம்போல் பேசி வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீநகரில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்,

ஓபிஎஸ் அணியினருக்கு கட்சியிலும் , ஆட்சியிலும் உரிய மரியாதை அளிக்கப்படும் என ஜெயகுமார் தெரிவித்தார். ஆனால் அந்த அணியில் உள்ள தலைவர்கள் தங்கள் இஷ்டம்போல கருத்துகளை தெரிவித்து வருவதால், தான் அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவதாக தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தை ஓபிஎஸ் அணியினர்  கூறிவருவது குழப்பத்தை ஏற்படுத்துவதாக  தெரிவித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஜெயகுமார் ஆகிய இருவரும்தான் இணைப்பு பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என மதுசூதனன் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த ஜெயகுமார், அமாவாசை இருட்டில் பெருச்சாளி செல்வதெல்லாம் பாதைதான் என கிண்டல் செய்தார். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த ஒரு சிலர் தான் பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டையாக உள்ளனர் என கூறினார்.

நானாக எந்த கருத்தும் சொல்வதில்லை என்றும், பிறர் பேசும்போது அதற்கு பதிலளிக்கும் வகையில்தான் பேசி வருவதாக கூறினார். இது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் எனவும் ஜெயகுமார் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!