சிறைக்கு செல்லும் கடைசி நொடி...!! பத்திரிக்கையாளர்களை உருகவைத்த சிதம்பரம்...!! நெகிழ்ச்சியில் உறையவைத்த பதில்...!!

By Asianet TamilFirst Published Sep 6, 2019, 1:35 PM IST
Highlights

அதாவது இந்தியா பொருளாதாரம் 5 சதவிகிமாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டவே அவர் அப்படி காட்டியிருந்தார்.என்றும் மத்திய அரசை விமர்சித்தும் இந்திய பொருளாதாரத்தை கேலி செய்யும் வகையிலும் அவர் 5 என காட்டினார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது,

நான் சிறைக்கு செல்வதைப் பற்றிக்கூட கவலைபட வில்லை நாட்டின் பொருளாதாரத்தைப்பற்றிதான் கவலைப்படுகிறேன் என திகாருக்கு செல்லும் முன் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முறைகேடில் ஈடுபட்டார் என கூறி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளது. இந்த நிலையில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  முன்னதாக நீதிமன்ற  விசாரணைக்காக தனி கோர்ட்டில்  ப. சிதம்பரத்தை சிபிஐ  ஆஜர் படுத்தியது. பின்னர் விசாரணையின் முடிவில் அவரை தீகார் சிறையில்  அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதைதொடர்ந்து அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அப்போது வழிமறித்த பத்திரிக்கையாளர்கள் ப.சிதம்பரத்திடம் கோர்ட்டு உத்தரவு குறித்து கருத்து கேட்டனர்.  ”நான் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதையோ அல்லது திகார் சிறையில் அடைக்கப்படுவதையோ எண்ணிக் கவலைப்படவில்லை , என்னுடைய கவலையொல்லாம் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியது தான்” என்று ப.சிதம்பரம் பதில் அளித்தார். 

பின்னர் சிபிஜ அதிகாரிகள் அங்கிருந்து அவரை வேகமான அழைத்துச் சென்று வானத்தில் ஏற்றி  திகார் சிறைக்கு அவரை கொண்டு சென்றனர். இரு தினங்களுக்கு முன் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துவரப்பட்டபோது,  செய்தியாளைப் பார்த்து  ஐந்து என கை கைவிரல்களை காட்டியிருந்தார் ப. சிதம்பரம். அங்கிருந்தவர் அதை பார்த்து குழப்பமடைந்தனர். 

அதாவது இந்தியா பொருளாதாரம் 5 சதவிகிமாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டவே அவர் அப்படி காட்டியிருந்தார்.என்றும் மத்திய அரசை விமர்சித்தும் இந்திய பொருளாதாரத்தை கேலி செய்யும் வகையிலும் அவர் 5 என காட்டினார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது, இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தைப் பற்றிதான் கவலைப்படுகிறேன் என்று சிதம்பரம் கூறியுள்ளது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


 

click me!