ஆபாச படம் பார்த்து மாட்டிக் கொண்ட துணை முதல்வர்... சர்ச்சையை மூடி மறைக்கும் ஆளும் கட்சி..!

Published : Sep 06, 2019, 01:05 PM IST
ஆபாச படம் பார்த்து மாட்டிக் கொண்ட துணை முதல்வர்... சர்ச்சையை மூடி மறைக்கும் ஆளும் கட்சி..!

சுருக்கம்

ஆபாச படம் பார்ப்பது தேச விரோதமல்ல. ஆபாச படம் பார்ப்பது தார்மீக ரீதியாக தவறானதுதான் என சட்டத்துறை அமைச்சர் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஆபாச படம் பார்ப்பது தேச விரோதமல்ல. ஆபாச படம் பார்ப்பது தார்மீக ரீதியாக தவறானதுதான் என சட்டத்துறை அமைச்சர் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 

பாரதிய ஜனதா கட்சியின் லட்சுமண் சங்கப்பா சாவடி, கர்நாடக மாநில எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சட்டசபைக்குள் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கினார். அவருடன் சட்டப்பேரவையில் அருகில் இருந்து ஆபாச வீடியோ பார்த்ததாக கூறப்பட்ட சி.சி.பாட்டீல், கிருஷ்ணா பலீமர் ஆகியோர் அப்போது அமைச்சர்களாக பதவி வகித்தனர். ஆபாச படம் பார்த்த சர்ச்சையால் அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

தற்போது கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியமைத்துள்ளது. ஆபாச படம் பார்த்த சர்ச்சையில் சிக்கிய அதே லட்சுமண் சங்கப்பா சாவடி துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பாஜகவுக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தலில் தோல்வியுற்ற ஒருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏன்? என்று எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கர்நாடகா மாநில சட்ட அமைச்சர் மதுசாமி இந்த விவகாரம் குறித்து, ‘ஆபாச படம் பார்ப்பது தேச விரோதமல்ல. ஆபாச படம் பார்ப்பது தார்மீக ரீதியாக தவறானதுதான். அதன் காரணமாக அவர் அமைச்சராகக் கூடாது என்று வாதிடுவதில் அர்த்தம் இல்லை. நாம் எல்லாருமே தவறுகள் செய்பவர்கள்தான். லட்சுமண் சுங்கப்பா யாரையும் ஏமாற்றவில்லை.

தேச விரோத செயல்களிலும் ஈடுபடவில்லை. இதற்காக ஆபாச படம் பார்ப்பதே சரி நான் கூறவில்லை. அதைப்பற்றிய  இது பற்றிய விவாதம் தேவையில்லை என்றுதான் கூறுகிறேன்’ என தெரிவித்துள்ளார். அவரது இந்தப்பேச்சு மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. 

வீட்டில் வைத்தோ தனிப்பட்ட இடத்தில் வைத்தோ ஆபாச படம் பார்ப்பது தவறு இல்லை. சட்டப்பேரவைக்குள் வைத்து மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்கள் மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர்கள் ஆபாச படம் பார்த்ததை எப்படி ஒரு அமைச்சர் நியாயப்படுத்த முடியும்..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள் எதிர்கட்சியினர். 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை