பாக்கெட்டும் இல்லை, பர்சும் இல்லை.. ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்ததாய் சொல்றாங்க.. பங்கமாய் கலாய்க்கும் ப.சி.!

By vinoth kumarFirst Published Jun 2, 2022, 11:48 AM IST
Highlights

 பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணச் சலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு. தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்?

சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வழங்கப்பட்ட விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாகக் கூறி வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் பாக்கெட்டும் இல்லை, பர்சும் இல்லை, ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பஞ்சாபில் வேலை செய்வதற்காக கார்த்தி சிதம்பரம், 250க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாகவும். அதற்காக ரூ.50 லட்சம் வரை கார்த்தி சிதம்பரம் லஞ்ச பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இதனையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சென்னை, டெல்லி உள்ளிட்ட 9 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. இது அரசியல் வழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், பணப் பரிமாற்றமே இல்லாமல் பணச்செலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு சுமத்துவதாக முன்னாள் நிதி அமைச்சரும், கார்த்தி சிதம்பரத்தின் தந்தையுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணச் சலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு

தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்?

பாக்கெட்டும் இல்லை, பர்ஸும் இல்லை, ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்?

— P. Chidambaram (@PChidambaram_IN)

 

இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணச் சலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு. தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? பாக்கெட்டும் இல்லை, பர்ஸும் இல்லை, ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? என பதிவிட்டுள்ளார். 

click me!