5 கட்சி மாறிய செந்தில் பாலாஜி சொன்னது உண்மைதான்.. ஊழல் செய்ய எனக்கு பக்குவம் போதாது.. அண்ணாமலை நச் பதிலடி.!

Published : Jun 02, 2022, 07:21 AM IST
5 கட்சி மாறிய செந்தில் பாலாஜி சொன்னது உண்மைதான்.. ஊழல் செய்ய எனக்கு பக்குவம் போதாது.. அண்ணாமலை நச் பதிலடி.!

சுருக்கம்

5 கட்சி மாறியவர், காற்றில் இருந்து, நிலக்கரியில் இருந்து விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் செந்தில் பாலாஜி. அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என்று சொல்லி இருக்கிறார் செந்தில் பாலாஜி. அவர் சொன்னதுபோல, எனக்கு பக்குவமாக ஊழல் செய்யத் தெரியாது. 

ஐந்து கட்சி மாறியவர் நிலக்கரியில் இருந்தும் விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி;- பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார். அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது, புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது. பத்திரிக்கையாளர்கள் பக்கத்தையும் தொலைக்காட்சி நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என தெரிவித்தார். 

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை 5 கட்சி மாறியவர், காற்றில் இருந்து, நிலக்கரியில் இருந்து விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் செந்தில் பாலாஜி.

அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அவர் சொன்னதுபோல, எனக்கு பக்குவமாக ஊழல் செய்யத் தெரியாது. செந்தில் பாலாஜி கருத்தை முற்றிலுமாக ஏற்கிறேன். அண்ணாமலைக்கு பக்குவமாக ஊழல் செய்யத் தெரியாது என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!
தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?