ப. சிதம்பரத்தின் ஜாமின் மறுப்பு...! எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு...!

By Asianet TamilFirst Published Aug 20, 2019, 7:59 PM IST
Highlights

முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து கைது செய்வதில் இருந்து விலக்களிக்க மறுத்துவிட்டார். மேலும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட சிதம்பரத்திற்கு அனுமதி வழங்கிய நீதிபதி மேல்முறையீடு செய்வதற்காக சிதம்பரத்துக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார். இந்த சூழலில் தற்போது டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகைதந்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது 

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில்  சிபிஐ அதிகாரிகளும் அவரை கைது செய்வதற்காக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் காத்திருக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது (2007), நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது.இதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.இந்த வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  இதையடுத்து, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் அவரை கைது செய்ய தடை விதித்தது.பின்னர் இந்தத் தடையை நீதிமன்றம் அவ்வப்போது நீட்டித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ப.சிதம்பரத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது என வாதிட்டனர். இதனையடுத்து சிதம்பரத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

மாபெரும் பொருளாதார குற்றத்தை விசாரிக்க முடியாமல் சிபிஐ, அமலாக்கத்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், பொருளாதார குற்றங்கள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் ப சிதம்பரத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் பல ஆவணங்கள் ஒத்துப்போவதாகவும்,  சிதம்பரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் , வழக்கறிஞர் பணிகள் வழக்கு விசாரணைக்கு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.விசாரணையின் போது ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. முரண்பாடாக பதில் அளித்ததாக சிபிஐ வழக்கறிஞர் குற்றச்சாட்டினார். விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கூறிய நீதிபதி முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து கைது செய்வதில் இருந்து விலக்களிக்க மறுத்துவிட்டார். மேலும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாட சிதம்பரத்திற்கு அனுமதி வழங்கிய நீதிபதி மேல்முறையீடு செய்வதற்காக சிதம்பரத்துக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய உள்ளார். இந்த சூழலில் தற்போது டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வருகைதந்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது 

 

click me!