#BREAKING ஆக்சிஜன் பற்றாக்குயைால் 20 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு.. ஊசலாட்டத்தில் 200 பேரின் உயிர்..!

By vinoth kumarFirst Published Apr 24, 2021, 11:29 AM IST
Highlights

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கையிருப்பு உள்ள ஆக்சிஜன் அரை மணிநேரத்தில் தீர்ந்துவிடும் என்பதால் 200 பேரின் உயிருக்கு ஆபத்து என ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமைன நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை மின்னல் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. இதனால், பல மாநிலங்களில் தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் கொத்து கொத்தாக உயிரிழக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றன. ஆனால் இந்த மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பில் இல்லை. இதனால் நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்குப் போராடினர். இந்த நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் 20 பேர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், கையிருப்பு உள்ள ஆக்சிஜன் அரை மணிநேரத்தில் தீர்ந்துவிடும் என்பதால் 200 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜனை விநியோகிக்க வேண்டும் என்று மாநில அரசை மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

click me!