முப்படைகளும் தயார்...கர்ஜிக்கும் இந்தியா...! எத்தனை நாடுகள் வந்தாலும் பதிலடி உண்டு...!

By Asianet TamilFirst Published Aug 16, 2019, 6:34 PM IST
Highlights

எத்தனை நாடுகள் எதிர்த்தாலும் அதை எதிர்கொள்ளவும், பதிலடி கொடுக்கவும் இந்தியா தயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இராணு ரீதியாலானாலும் சரி, இராஜ தந்திர ரீதியிலானாலும் சரி அனைத்தையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது உலகநாடுகள் அறியும். நாட்டின் பாதுகாப்பை பொருத்தவரையில் எந்த நேரத்திலும் எந்த முடிவும் எடுக்க இந்தியா தயங்காது என்பதையும் உலகநாடுகளுக்கு இந்தியா தெரிவித்து வருகிறது. 
 

ஜம்முகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று இரவு கூடுகிறது , இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்தும், அதில் தங்கள் நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் மிக ரகசியமாக விவாதிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், கூட்டம் தொடர்பான தகவல்கள் வெளியில் தெரியாத அளவிற்கு அதில்  ரகசியம் காக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்துசெய்யப்பட்டு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டுள்ளது, இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டத்தை தெரிவித்ததுடன், சினாவுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது, காஷ்மீர் விவகாரத்தில் சினாவும் இந்தியாவிற்கு எதிரான மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது, அதன் வெளிபாடகத்தான் சினாவின் வற்புறுத்தலின் பேரில் எப்போது இல்லாத வகையில் ஐநா பாதுக்காப்பு கவுன்சில், தற்போது காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடிவுசெய்து. அதற்கான கூட்டமும் இன்று இரவு கூடுகிறது. ஐநா பாதுகாப்பு கவுனிசிலில் இடம்பெற்றுள்ள சினாவின் உதவியுடன் பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, இதை ஒரு சர்வதேச பிரச்சனையாக மாற்றியுள்ளது என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இரவு நடைபெற உள்ள ஐநா பாதுகாப்பு கவுனிசில் கூட்டத்தில் உறுப்புநாடுகளாக உள்ள, அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ், ரஜ்யா சினா, உள்ளிட்ட நாடுகளின் உறுப்பினர்கள் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ரகசிய ஆலோசனை நடத்த உள்ளனர், அந்த கூட்டத்தில்  தீர்மானங்களோ, வாக்கெடுப்போ, இந்த எந்தவிதமான முடிவோ, எடுக்கப்படாது என்றும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்தும், அதில் உலகநாடுகள் என்ன செய்யமுடியும் என்பது குறித்து மட்டும் ரகிசிய ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. அக்கூட்டதிற்கு பின்னர் அதில் விவாதிக்கப்பட்ட தகவல்கள் வெளியில்கள் சிறிதளவும் கசியாத அளவிற்கு மிகமிக ரகசியமாக இருக்கும் என்றும்தகவல்கள்கூறுகின்றன. 

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சினா, ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு எதிரான நிலைபாட்டை எடுத்தாலும் ரஷ்யா மட்டும் இந்தியாவிற்கு ஆதரவாக பேசும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைக்கு இந்தியாவிற்கு உள்ள பலமாக ரஷ்யா கருதப்படுகிறது. எப்போதொல்லாம் இந்தியா இக்கட்டான சூழல்களில் இருக்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவுடன் துணை நிற்கும் நாடாக ரஷ்யா இருந்துவருவதை இந்தியாவால் மறுக்கமுடியாது.

ஆனால் எத்தனை நாடுகள் எதிர்த்தாலும் அதை எதிர்கொள்ளவும், பதிலடி கொடுக்கவும் இந்தியா தயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இராணு ரீதியாலானாலும் சரி, இராஜ தந்திர ரீதியிலானாலும் சரி அனைத்தையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது உலகநாடுகள் அறியும். நாட்டின் பாதுகாப்பை பொருத்தவரையில் எந்த நேரத்திலும் எந்த முடிவும் எடுக்க இந்தியா தயங்காது என்பதையும் உலகநாடுகளுக்கு இந்தியா தெரிவித்து வருகிறது. 


 

click me!