வாலாட்டினால் அணு ஆயுதத்தை பயன்படுத்தக் கூட தயங்க மாட்டோம் !! பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த ராஜநாத்சிங் !!

By Selvanayagam PFirst Published Aug 16, 2019, 5:50 PM IST
Highlights

எதிர்காலத்தில் சூழ்நிலைக்கேற்ப அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடியாக தெரிவித்தார். 

உலக நாடுகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்து குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என உலகெங்கிலும்  உள்ள நாடுகள் கோரிக்கை விடுத்துவருகின்றன.

இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர்  அடல் பிகாரி வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொக்ரானில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அப்போது வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்த இதுவே சரியான இடமாகும். எனவே இங்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

அண்மைக்காலமாக பாகிஸ்தான் நாடு இந்திய பிரச்சனைகளில் தேவையில்லாமல் தலையிட்டு வருகிறது. காஷ்மீர் மக்கள் தற்போது தான் சுதந்திரம் அடைந்தது போன்ற ஒரு உணர்வைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என ராஜ்நாத் சிங் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எதிரி நாடுகள் பயன்படுத்தினால் பதில் தாக்குதலுக்கு மட்டுமே அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என்பதே இந்தியாவின் கொள்கையாக உள்ளது. ஆனால், எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டின் அணு ஆயுதக் கொள்கை மாற வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தானுக்கு அவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

click me!