அந்த ஒரே காரணத்திற்காக நிச்சயம் பாஜகவில் ஓ.பி.எஸ் இணைவார்... அடித்துச் சொல்லும் தங்க தமிழ்செல்வன்..!

By Thiraviaraj RMFirst Published May 2, 2019, 1:28 PM IST
Highlights

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு குடும்பத்தோடு பாஜகவில் இணைவார் என அ.ம.மு.க கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ரிசல்ட் வந்த பிறகு குடும்பத்தோடு பாஜகவில் இணைவார் என அ.ம.மு.க கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த தங்க தமிழ்ச்செல்வன், ‘’தனது கருத்தை முட்டாள்தனமான கருத்து என்று கூறிய ஓபிஎஸ் எதற்கு 4 பக்க அறிக்கையை வெளியிட வேண்டும்? ஓபிஎஸ் நிச்சயம் பாஜகவில் இணைவார். ஓபிஎஸ் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜகவில் குடும்பத்தோடு இணைவது 100 சதவிகிதம் உண்மை. தேர்தல் தோல்வி பயத்தால் தனது சொத்துக்களை பாதுகாக்க ஓபிஎஸ் பாஜகவில் இணைவார். பாஜகவில் இணைய மாட்டேன் என ஓபிஎஸ் கூறியிருப்பது போலித்தனமானது. மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயமிருக்கும்’’ என அவர் தெரிவித்தார். 

மோடி மனுதாக்கல் செய்த போது வாரணாசிக்கு குடும்பத்துடன் சென்றார் ஓ.பி.எஸ். இதனையடுத்து அவர் பாஜகவில் இணைய உள்ளதாக பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஓ.பிஎஸ். அதில், ’’நான் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வதாக கூறுவது வடிகட்டிய பொய். பாஜகவுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளியை அவதூறாக பரப்புகின்றனர். 

அதிமுக கொடி அதிமுகவில் எளிய தொண்டனாக இருந்து கனவிலும் எதிர்பாராத உயரங்களை அடைந்தேன். உயிர்போகும் நாளில் அதிமுக கொடியை போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக கருதுகிறேன். என் மீது பரப்பப்படும் அவதூறுகளையும் பொய் குற்றச்சாட்டுகளையும் மக்கள் ஏற்கமாட்டார்கள். மெகா கூட்டணி ஈட்ட இருக்கும் வெற்றியை நினைத்து சில குள்ளநரிகள் என் மீது வதந்தி பரப்புகின்றனர். என் மீது வதந்தி பரப்பி என் அரசியல் வாழ்க்கையை காயப்படுத்த அலைவதை நினைத்து வேதனைப்படுகிறேன் என ஓ.பி.எஸ் தெரிவித்து இருந்தார். 
 

click me!