எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் மாநாடு அடுத்த மாதம் மதுரையில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு போட்டியாக மாநாட்டை நடத்துவதற்கான தேதியை ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிடுகிறார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டார். இருந்த போதும் தாங்கள் தான் உண்மையான அதிமுக கூறி சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார். இதனிடையே ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையிலான அணி கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏராளமான மக்கள் திரண்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் அடுத்த மாநாட்டை நடத்த ஓபிஎஸ் அணி முடிவு செய்தது.
undefined
போட்டி மாநாடுக்கு தேதி அறிவிப்பு.?
அடுத்த மாநாடு நடத்துவது தொடர்பாக மேற்கு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ், கடந்த ஜூலை 1 ஆம் தேதி அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள் பலர் கோவை , சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மாநாடு நடத்த தங்களது கருத்தினை முன்வைத்தனர். இந்நிலையில், அடுத்த மாநாட்டுக்கான தேதி மற்றும் இடத்தை இன்று காலை ஓ.பி.எஸ் அறிவிக்கவுள்ளார். இதற்காக இன்று காலை செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இந்த மாநாட்டில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை ஒரே மேடையில் ஏற்றவும் திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடத்தவுள்ள நிலையில் அதற்கு போட்டியாக ஓ.பி.எஸ் அணியும் அடுத்த மாதம் மாநாடு நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்