ஓபிஎஸ் அணி மாநாட்டில் டிடிவி. தினகரன்? செய்தியாளர்கள் கேள்விக்கு அவரே கொடுத்த பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published Apr 11, 2023, 7:32 AM IST

மத்திய அரசு நிலக்கரிக்கான ஆய்வை செய்ய மாட்டோம் என கூறியிருக்கிறார்கள் அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் வருங்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகள் விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது. 


வருங்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகள் விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- டெல்டா பகுதி மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையே தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் மத்திய மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது என்பதுதான். மத்திய அரசு நிலக்கரிக்கான ஆய்வை செய்ய மாட்டோம் என கூறியிருக்கிறார்கள் அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் வருங்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான டெல்டா பகுதிகள் விவசாயத்தை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வரக்கூடாது. 

Latest Videos

விவசாயம் சார்ந்த, சுற்றுச்சூழலை, இயற்கையை பாதிக்காத திட்டத்தை தான் கொண்டுவர வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கை அதுதான். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிலைப்பாடும் அதுதான். மக்கள் விரும்பாத திட்டத்தை செயல்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம். மேலும் இத்திட்டத்தை இங்கு செயல்படுத்தினால் அமமுக சார்பில் அந்த பகுதி மக்கள் விவசாயிகளோடு இணைந்து அந்த முயற்சியை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடைபெறும். மோடி இபிஎஸ் ஓபிஎஸ்யை சந்திக்காதது அவர்களது கூட்டணி பிரச்சினை அதில் கருத்து சொல்வது நல்லதாக இருக்காது.

ஓபிஎஸ் திருச்சி மாநாட்டுக்கு டிடிவி. தினகரன் அழைப்பு விடுத்தால் அதைப்பற்றி பின்னாடி பார்ப்போம். இன்னும் மாநாட்டுக்கு 13, 14 நாட்கள் இருக்கின்றன. யூகத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என கூறியுள்ளார். 

click me!