ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல்... அன்றே அரசிதழில் வெளியிடப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

By Narendran S  |  First Published Apr 11, 2023, 12:13 AM IST

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் 10.04.2023 அன்றே அரசிதழில் வெளியிடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் 10.04.2023 அன்றே அரசிதழில் வெளியிடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனித்தீர்மானத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியிருந்தோம். இதனால் தமிழ்நாட்டின் நிர்வாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம்.

இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக பேசினால் அது ஸ்டாலினுக்கு தான் ஆபத்து... எச்சரிக்கை விடுத்த ஹெச்.ராஜா!!

Tap to resize

Latest Videos

மேலும் பொதுவெளியில் ஆளுநர் தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஆன்லைன் சூதாட்டம் தடை தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டமானது இன்றே (10.04.2023) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என்பதை அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மார்ச் 23 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் 2வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். 

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து... கண்டன பொதுக்கூட்டமாக நடத்த திமுக கூட்டணி முடிவு!!

இதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைக்கப்பட்ட மசோதா குறித்து பொதுவெளியில் தெரிவித்த கருத்துகள் கடும் எதிர்ப்புகளை கிளப்பிய நிலையில் ஆளுநரின் செயல்பாடும் குறித்து விவாதிக்கும் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!