
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அடுத்த மாதம் 12ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதைதொடர்ந்து திமுகவில் மருதுகணேஷ், அதிமுக சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனன், 3வது அணியாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தேமுதிகவில் மதிவாணன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இதைதொடர்ந்து அதிமுக ஓ.பி.எஸ். அணிக்கு வாக்கு சேகரிப்பது, மக்களை சந்திப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று இரவு சென்னை வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள மதுசூதனன் வீட்டில் நேற்று மாலை நடந்தது.
இதில் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செம்மலை, ஜே.சி.டி.பிரபாகர், மைத்ரேயன், மா.பா.பாண்டியராஜன், பொன்னையன், மனோஜ் பாண்டியன் உள்பட மூத்த நிர்வாகிகளும், தொகுதி அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.
அதில், ஆர்கே நகர் தொகுதியில் உள்ள 7 வார்டுகளிலும், மேற்கண்ட மூத்த நிர்வாகிகளின் தலைமையில், ஒவ்வொரு வார்டுக்கும் ஒருவரை பொறுப்பாளராக நியமித்து, மக்களிடம் வாக்கு சேகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.