
தீபா தலைமையில் பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு 7.30 ஆர்கே நகர் தொகுதி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்தில் தீபா பேசியதாவது: இந்த தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி. அந்த தொகுதி மக்களுக்கு, ஜெயலலிதா என்ன செய்ய நினைத்தாரோ அதை நான் செய்ய காத்திருக்கிறேன்.
அதற்காகவே இந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். எனக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கிறது. அதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். மக்கள் பணி செய்ய முடிவு செய்து விட்டேன்.
எனவே ஆர்கே நகர் தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி. இதை யாராலும் மாற்ற முடியாது. எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்’’ இவ்வாறு அவர் பேசினார்.