செய்தியாளர்களுடன் தீபா ஆதரவாளர்கள் மோதல் - ஆர்.கே. நகரில் பரபரப்பு

First Published Mar 17, 2017, 10:31 AM IST
Highlights
deepa supporters against reporters in rk nagar


ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆர்கே நகர் தொகுதியில் இடைத் தேர்தல் அடுத்த மாதம் 12ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையொட்டி திமுகவில் மருதுகணேஷ், அதிமுக சசிகலா அணியில் டி.டி.வி., ஓ.பி.எஸ். அணியில் மதுசூதுனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா 3வது அணியாகவும், தேமுதிகவில் மதிவாணன் ஆகியோர் கேளம் இறங்கியுள்ளனர்.

இதைதொடர்ந்த ஆர்கே நகர் தொகுதி புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை, தீபா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

முன்னதாக கூட்டம் மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், தீபா ஆதரவாளர்களும், அனைத்து பத்திரிகையாளர்களும் அங்கு சென்றனர். ஆனால், மாலை 7 மணிக்கு கூட்டம் நடைபெறும் திருமண மண்டபத்துக்கு தீபா சென்றார்.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தீபாவின் கார் வந்ததை பார்த்ததும், அங்கிருந்த செய்தியாளர்கள், புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை தீபா ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுமோதல் உருவானது.

இதைபார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள், அவர்களை சமரசம் செய்து, அனுப்பினர். இதற்கிடையில் தீபா, ஆலோசனை கூட்டம் நடக்கும் மேடைக்கு சென்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள், அங்கு சென்றபோது, அவர்களை செய்தி சேகரிக்கவும், புகைப்படம் எடுக்கவிடாமல் தடுத்தனர். அவர்கள் மீது தண்ணீர் பாட்டிலை வீசி, அவர்களை பணிகளை செய்யவிடாமல் தடுத்தனர். இதனால், மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஆனது.

இதனால், அந்த கூட்டத்தை புறக்கணித்து அனைத்து செய்தியாளர்களும், மண்டபத்தில் இருந்து வெளியேறினர். தீபாவின் ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்களால் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

நேற்று மாலை நடந்த தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு சென்னையை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. பெரும்பாலும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களே இருந்தனர். மேலும், தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்கள் வரவழைக்கப்பட்டதாக செய்தியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

click me!