
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணையுமா என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி. பேச்சுவார்த்தைக்கு பன்னீர்செல்வம் வராவிட்டாலும் பிரச்சனை இல்லை என்று முதல்வர் எடப்பாடி நேற்று பேசியதாக தகவல் வெளியானது.
முன்னதாக எடப்பாடியுடன் இணைய வேண்டாம் என்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பம் என பன்னீர்செல்வம் ஆதரவாளர் செம்மலை தெரிவித்திருந்தார்.
இப்படி இரு தரப்பும் மாறி மாறி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருவதால் அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையே எடப்பாடி டீமுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், செம்மலை, நத்தம் விஸ்வநாதன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினை ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.