
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டார். முதலில் எம்எல்ஏக்களை, தொகுதிக்கு சென்று வர சொல்லுங்கள். பின்னர், வாகெடுப்பு நடத்தலாம் என்ற கோரிக்கை வைத்தார்..
சசிகலா , ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்த நிலையில் சசிகலா தரப்பினர் தங்களுக்கு ஏராளமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்க வேண்டும் என உரிமை கோரினர்.
கவர்னர் அவர்களுக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதில் ஆரம்பம் முதலே எம்.எல்.ஏக்கள் யார் பக்கம் எனபதில் பல கருத்துகள் நிலவியது. எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் 11 நாட்களாக அடைத்து வைத்துள்ளதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டிவந்த நிலையில் பல எம்.எல்.ஏக்கள் தப்பி வந்தனர்.
iந்நிலையில் இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில் ஆரம்பம் முதலே எதிர்கட்சிகள் , ஓபிஎஸ் அணியினர் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய பின்னர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.
சட்டசபையில் மக்கள் குரல் ஒலிக்க வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். எம்எல்ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமானால், வாக்கெடுப்பை தள்ளி வைத்து எம்எல்ஏக்களை அவரவர் தொகுதிக்களுக்கு சென்று வந்த பின்னர், வாக்கெடுப்பை நடத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.