கோபத்துடன் வெளியேறிய தனபால்... ஓடிப்போய் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த கு.க.செல்வம் - சட்டபேரவையில் ரகளை

 
Published : Feb 18, 2017, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
கோபத்துடன் வெளியேறிய தனபால்... ஓடிப்போய் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த கு.க.செல்வம் - சட்டபேரவையில் ரகளை

சுருக்கம்

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓபிஎஸ் சசிகலா இடையே இருந்த அதிகாரப் போட்டி அக்கட்சியை இரண்டாக பிளவுபட்டுபோயுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேந்தெடுக்கப்பட்டதில் இருந்தே பிரச்சனை தோன்றியது. பின்னர் ஓபிஎஸ் ராஜினாமா செய்து, ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து போர்க்கொடி உயர்த்தினார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு  இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுகவும், ஓபிஎஸ் ஆதரவாவாளர்களும் வலியுறுத்தி கடும் அமளி ஏற்பட்டது வரலாறு காணாத அளவுக்கு அமளியால் சட்டப் பேரவை போர்க்களம் போல் காட்சி அளித்தது,

ஒரு கட்டத்தில் கடுப்பான சபாநாயகர் தனது இருக்கையை விட்டு எழுந்து சென்று விட்டார். சபை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பிறகு அரங்கேறியதுதான் உச்சகட்டம். திமுகவின் ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க..செல்வம் உடனடியாக சபாநாயகரின் இருக்கையில் ஏறி அமர்ந்து ரகளை செய்தார்

அவர் 1 மணி வரை அதே சீட்டில் இருப்பாரா அல்லது தொடர்ந்து அமர்ந்திருப்பாரா?

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!