
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை போயஸ்கார்டனில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, செல்லூர்ராஜு, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.