வியாபாரிகளுக்கு உறுதியளித்தார் கனிமொழி – “பரிவர்த்தனைக்கான சேவை கட்டணம் ரத்து…?”

First Published Feb 5, 2017, 12:13 PM IST
Highlights


மாநிலங்களவை எம்பி கனிமொழியை, தமிழக வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, பண பரிவர்த்தனைக்கான சேவை கட்டணத்தை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, டிஜிட்டல் பரிவர்த்தனை, ஸ்வைப் கார்டு மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதார் ஏற்படும் சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். உள்நாட்டு வியாபாரிகள், உள்ளூரில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்படும் உற்பத்தி மற்றும் சேவை வரியை குறைக்க வேண்டும் என கூறினர்.

மேலும், உள்ளூர் பொருட்களுக்கு தங்கு தடையில்லாமல் விற்பனை செய்வதால்,சிறு வணிகர்கள், பெரிய மற்றும் அன்னிய நிறுவனங்களுக்கு இணையாக தங்களை நிலை நிறுத்தி கொள்ள முடியும். அதே வேளையில் சிறு வணிகர்களையும், உற்பத்தியாளர்களையும் ஊக்குவிப்பதற்காக அரசு சார்பில் வழங்கப்படும் மானிய உதவிகள், கடன்கள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். என தெரிவித்தனர்.

இதைதொடந்து வரும் 8ம் தேதி டெல்லியில், மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்து, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை தெரிவிப்பதாகவும், அப்போது, வியாபாரிகள் சங்க பேரவையை சேர்ந்தவர்களை நேரில் வைத்து பேசுவதாகவும் கனிமொழி உறுதியளித்தார்.

இதுதொடர்பாக கனிமொழி, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியிடம் தனிப்பட்ட முறையில் வியாபாரிகள் சங்கத்தினருக்காக பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

click me!