பா. ஜ.க வுடன் பரஸ்பர உறவுடன் உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கவில்லை எனவும், மோடியை சந்திப்பது எங்கள் சவுகரியத்துக்குட்பட்டது என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்- இபிஎஸ் மோல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டதையடுத்து எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் புதிய கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறது. இந்தநிலையில் இதே போல பாஜகவுடன் தங்கள் கூட்டணியை வலுப்படுத்து திட்டம் வகுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை நிறைவு விழா நேற்று முன்தினம் பல்லடத்தில் நடைபெற்றது.
மோடி கூட்டத்திற்கு அழைக்காதது ஏன்.?
இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்த நிலையில், சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் , பண்ருட்டி ராம்சந்திரன் , மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், பிரதமர் மோடியால் தான் நிலையான ஆட்சி தர முடியும் எனவும், மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதே தங்களின் அரசியல் நிலைப்பாடு என தெரிவித்தார்.
நாங்கள் வீட்டில் உள்ளவர்கள்
தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு விடுக்கப்படாதது ஏன் என கேட்டதற்கு, விருந்தாளிகளை தான் அழைப்பார்கள், நாங்கள் வீட்டில் உள்ளவர்கள், எங்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என பதிலளித்தார். மேலும் விருந்தாளிகளுக்கு தான் விருந்து வைக்கப்பட்டும். மிஞ்சியதை நாங்கள் சாப்பிடுவோம் எனவும் தெரிவித்தார். பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் நேரம் கேட்கவில்லை எனவும், மோடியை சந்திப்பது தங்கள் சாவுகரியத்துக்குட்பட்டது என தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் , பா. ஜ க கூட்டணியில் தொடர்வதாகவும், பா ஜ க உடன் பரஸ்பர உறவுடன் உள்ளதாகவும், கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் பா ஜ க தரப்பில் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை எனக் கூறிய அவர், தேர்தல் தேதி அறிவித்தவுடன் தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்