அடிக்க பாய்ந்த டி.டி.வி.தினகரன்... பகீர் கிளப்பும் ஓ.பி.எஸ்!

By sathish kFirst Published Sep 2, 2018, 10:58 AM IST
Highlights

நான் தர்மயுத்தம் தொடங்குவதற்கு முன்பு  நாங்கள் ஒன்றிணைந்து விடக்கூடாது என்பதற்காக என்னையும், அமைச்சர்களை அடிக்க வந்தவர் தான் இந்த தினகரன் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

மன்னார்குடியில் நேற்று காவிரியில், தமிழகத்தின் உரிமையை மீட்டெடுத்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா வழிநிற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், சாதனைகளை விளக்கியும் திருவாரூர் மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்றுப் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் , வர்தா புயல், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சனைகளை வைத்து ஜெயலலிதாவின் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க நினைத்தார்கள். நான் முதல்வராக இருந்து வர்தா புயலை விரட்டி அடித்த பின் தமிழகத்திற்கு எந்த புயலும் வரத் தயங்குகிறது.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது திவாகரன் என்னிடம், நீங்கள் முதலமைச்சராக  இருங்கள் என வலியுறுத்தினார். நான் மறுத்தேன் அவர் ஏன் என்று திவாகரன் கேட்டார். உங்களது உறவினர்களான 16 பேர் இங்கு உள்ளனர். மற்றவர்கள் அனைவரும் என்னைப் பகைவனாய் பார்பார்கள் என நான் மறுத்தேன். மீண்டும் வலியுறுத்தினார். இவர்களது குடும்பத்தின் குணம் தெரிந்த நான் அவரிடம், நான் மூன்று மாதங்கள் மட்டும் முதலமைச்சராக இருக்கிறேன்.

பின்னர் நீங்கள் வேறு யாரையாவது மாற்றிக்கொள்ளுங்கள் என கூறினேன். அதன்பிறகு அவர்களிடம் நான் பட்ட கொடுமைக்கு அளவேயில்லை என கூறினார். ஆனால், தற்போது வரை தினகரன் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை. கட்சியை கைபற்ற தினகரன் நினைத்ததால் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

மன்னார்குடியில் சிலநாட்களுக்கு முன்பு பேசிய தினகரன் என்னை துரோகி என்று பேசியுள்ளார். தினகரன் என்ன பெரிய தியாகியா?அ.தி.மு.க.விற்காக என்ன தியாகத்தை அவர் செய்துள்ளார்? என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார். 33 வருடங்களாக ஜெயலலிதாவுடன் இருந்தோம் என்று சசிகலா தரப்பினர் கூறுகிறார்கள். அவர்கள்  அ.தி.மு.க.வை கைப்பற்ற சதி செய்ததை ஜெயலலிதா அறிந்து கொண்டதால்தான் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே தினகரன் முதல்வராக வேண்டும் என சதி செய்தார். எனவே நான் உயிரோடு இருக்கும் வரை தினகரனை வீட்டிற்குள் விடமாட்டேன் என ஜெயலலிதாவே சொன்னார். தர்மயுத்தத்தின் போது நாங்கள் ஒன்றிணைந்து விடக்கூடாது என அமைச்சர்களை அடிக்க வந்தவர் தான் இந்த தினகரன். அவரின் அத்தனை முயற்சிகளையும் தவிடு பொடியாக்குவோம்.

தினகரன் எங்களை துரோகி துரோகி என்கிறார். அவர் ஒன்றும் பெரிய தியாக செம்மல் அல்ல. என்னை அவர் ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்ததாக சொல்கிறார். ஆனால், நான் பெரியகுளத்தில் ஜெயலலிதா யுனிவர்சிட்டியில் சேர்ந்தபோது அவர் எல்கேஜி படிக்க வந்தவர் எனத் தெரிவித்தார். 

click me!