தந்தை பெரியார் படத்தை உடைத்து மாணவர்களை தாக்குவதா.? ஏபிவிபி அமைப்பு மீது நடவடிக்கை எடுத்திடுக- சீறிய ஓபிஎஸ்

Published : Feb 23, 2023, 07:43 AM IST
தந்தை பெரியார் படத்தை உடைத்து மாணவர்களை தாக்குவதா.? ஏபிவிபி அமைப்பு மீது நடவடிக்கை எடுத்திடுக- சீறிய ஓபிஎஸ்

சுருக்கம்

தந்தை பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் படங்களை சேதப்படுத்தியதோடு, தமிழக மாணவர் மீது கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியுள்ள அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

மாணவர்கள் மீது தாக்குதல்

புது டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவரை கொடூரமாகத் தாக்கியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏபிவிபி அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே மிகப் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமாக விளங்கும் பல்கலைக்கழகங்களில் ஒன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.

மாணவர்கள் சங்க அறையில் ஒரு பிரிவினர் திரைப்படத்தை திரையிட திட்டமிட்டு இருந்ததாகவும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்த மாணவர்கள் அதே அறையில் மராத்திய மன்னர் சிவாஜியின் பிறந்த நாளை கொண்டாட வலியுறுத்தியதாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் மராத்திய மன்னர் சிவாஜி, லெனின், கார்ல் மார்க்ஸ் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் படங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 

சீமான் பங்கேற்ற பரப்புரையில் கல்வீச்சு… 6 பேர் படுகாயம்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!

ஏபிவிபிக்கு கண்டனம்

இந்தச் சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, மூலக்கூறு மருத்துவம் குறித்த ஆராய்ச்சி மாணவர் திரு. நாசர் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டு அவருடைய பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. மண்டை உடைந்ததாகவும் தந்தை பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் படங்களை சேதப்படுத்தியதோடு, தமிழக மாணவர் மீது கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியுள்ள அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொல்லுக்கு சொல், வார்த்தைக்கு வார்த்தை பேச்சுக்கு பேச்சு என்ற முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டிய பல்கலைக்கழகங்கள் வன்முறை கூடாரங்களாக மாறுவதை தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், 

தண்டனை பெற்றுக்கொடுங்கள்

பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் உண்டு. பல்கலைக்கழக வளாகத்திற்குள் தினமும் என்னென்ன நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்திருந்தால் இதுபோன்ற வன்முறைச் சம்பவத்தை தடுத்திருக்கலாம். இதைச் செய்யாதது பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் திறமையின்மையைத்தான் காட்டுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் திரு. நாசர் மீது கொடூரத் தாக்குதல் நிகழ்த்தியவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுத் தரவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கையினை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்..! வாய்மூடி வேடிக்கை பார்த்த போலீஸ்.! ஏபிவிபி அமைப்பினர் மீது நடவடிக்கை-கனிமொழி

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!