
தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு எதிராக அம்மா போராடினார். ஆனால் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில் ஆட்சி அமைய அனுமதிக்கலாமா ? சிந்தியுங்கள் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
நாளை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில்124 எம்.எல்.ஏக்களில் 117 பேர் வாக்கை பெற்றால் முதல்வராக ஆட்சியில் எடப்பாடி நீடிக்க முடியும் என்ற நிலையில் நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.
ஆட்சியை தக்கவைத்து கொள்ள இந்த நிமிடம் வரை கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை தங்கவைத்து யாரையும் சந்திக்காமல் வைத்துள்ளனர். இதில் பல எம்.எல்.ஏக்களின் மனநிலை என்னவென்பது தெரியாத நிலையில் நாளை என்ன நடக்கும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது.
வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைக்க ஸ்டாலினும் அதை வரவேற்பதாக சொன்னார். இந்நிலையில் எம்.எல்.ஏக்களுக்கு ஓபிஎஸ் உருக்கமாக ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது. குடும்ப அரசியலை எதிர்த்து வெற்றி பெற்றவர் முன்னாள் மதலமைச்சர் அம்மா , ஒரு குடும்பத்தின் கீழ் ஆட்சி அமைக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் உறுதுணையாக இருக்கலாமா? நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கும் முன் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
பொதுமக்கள் தொண்டர்கள் ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம். எங்களது அறப்போராட்டம் மகத்தான வெற்றிபெறும்.
மனசாட்சிப்படி வாக்களித்தால் எங்கள் அணியே வெற்றி பெறும்.எங்களது அரப்போராட்டம் 100% வெற்றி பெறும். இவ்வாறு ஓபிஎஸ் உருக்கமுடன் வேண்டுகோள் வைத்தார்.