‘உண்மையான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் நான்தான்’- சிவபால் யாதவுக்கு அகிலேஷ் எச்சரிக்கை

 
Published : Feb 17, 2017, 09:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
‘உண்மையான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் நான்தான்’- சிவபால் யாதவுக்கு அகிலேஷ் எச்சரிக்கை

சுருக்கம்

சிவபால் யாதவ் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உ.பி. முதல்-அமைச்சர் அகிலேஷ் யாதவ், ‘‘உண்மையான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் நான்தான்’’ என்று கூறினார்.

புதிய கட்சி

சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்ட குடும்ப மோதலில் வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் அகிலேஷ் யாதவ் கட்சியின் தேசிய தலைவராக அறிவிக்கப்பட்டார். கட்சியின் அதிகாரபூர்வ சைக்கிள் சின்னமும் அவருக்கு கிடைத்தது.

இந்த நிலையில், அகிலேஷ் யாதவின் எதிர்ப்பாளர்களில் முக்கியமானவரும், அவருடைய சித்தப்பாவுமான சிவபால் யாதவ் வேட்பு மனு தாக்கல் செய்த அன்று பேசும்போது, தேர்தலுக்குப்பின் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து இருந்தார்.

எச்சரிக்கை

இந்த நிலையில், கட்சியின் கோட்டையாக விளங்கும் எட்டாவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார முதல் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது கட்சியை பலவீனப்படுத்தும் எதிர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், ‘‘உண்மையான சமாஜ்வாதி கட்சிக்கு தலைமை வகிப்பது நான்தான்’’ என்று அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-

வித்தியாசம்

‘‘சிலர் (சிவபால் யாதவ்) புதிய கட்சி தொடங்க நினைக்கிறார்கள்...இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலுக்கும் இங்கு நடைபெறும் தேர்தலுக்கும் வித்தியாசம் உள்ளது.

இங்கு என்னை தேற்கடிக்க முயற்சி நடைபெறுகிறது....அது போன்ற சதித்திட்டங்களுக்கு எட்டாவா மக்கள் இரையாகிவிடக் கூடாது. ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு குவிந்து இருக்கிறீர்கள். எங்களுடையதுதான், உண்மையான சமாஜ்வாதி கட்சி.

தூக்கி எறிய..

சிலர் என்னை கட்சியில் இருந்து தூக்கி எறிய சதித்திட்டம் தீட்டனார்கள். ஆனால், இதில் அவர்களை வெற்றிபெற நான் அனுமதிக்கவில்லை. நான் வளர்ச்சித்திட்டங்களை கொண்டு வருவதில் கவனம் செத்தினேன். ஆனால், அவர்கள் என்னை பலவீனப்படுத்த விரும்பினார்கள்’’.

இவ்வாறு அகிலேஷ் கூறினார்.

கருத்து சொல்ல மறுப்பு

அகிலேஷின் இந்த குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல சிவபால் யாதவ் மறுத்துவிட்டார்.

‘‘எனக்கு நேதாஜியின் (முலாயம்சிங்கின்) ஆசி உள்ளது. அவர் என்ன கட்டளை பிறப்பிக்கிறாரோ, அதற்குக் கட்டுப்பட்டவன் நான்’‘ என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஓரங்கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி
41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!