வரும் 8 ஆம் தேதிக்குள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நல்ல பதில் வராவிட்டால்? ஓபிஎஸ் கடும் எச்சரிக்கை….

 
Published : Mar 04, 2017, 06:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
வரும் 8 ஆம் தேதிக்குள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நல்ல பதில் வராவிட்டால்? ஓபிஎஸ் கடும் எச்சரிக்கை….

சுருக்கம்

Ops press meet about jayalalitha death

வரும் 8 ஆம் தேதிக்குள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நல்ல பதில் வராவிட்டால்? ஓபிஎஸ் கடும் எச்சரிக்கை….

ஜெயலலிதா மரணத்தில் உரிய நீதி கிடைக்கும் வரை, தர்ம யுத்தம் தொடரும் என்றும் வரும் 8ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் முடிவதற்குள்  நல்ல பதில் வராவிட்டால் போராட்டம் வீரியமடையும் என ஓபிஎஸ் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை தீர்க்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாக கூறினார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நாள்தோறும் அங்கு சென்றுவந்தாலும் அங்கு என்ன நடக்கிறது என்பதை தனக்கு யாரும் தெரிவிக்கவிலைலை என ஓபிஎஸ் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் இது குறித்து கேட்டடபோது அவர்கள் சொன்ன பதில் தம்மை மிகுந்த சங்கடத்திற்கு ஆளாக்கியதாக தெரிவித்தார்.

ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும்படி சசிகலாவிடம் தான் மன்றாடியதாகவும் ஆனால் அவர் குணமடைந்து விடு வார் எனக் கூறியே, 75 நாட்களை கடத்திவிட்டதாகவும் ஓபிஎஸ் குற்றச்சாட்டினார்.

ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் சசிகலா கேட்டுக் கொண்டதால் தான் முதலமைச்சரானதாகவும் ஆனால் சசிகலா அப்பதவிக்கு வர துடித்தார் என தெரிவித்த ஓபிஎஸ், இரண்டரை மணி நேரம் போராட்டத்துக்கு பின், நிர்ப்பந்தம் காரணமாகவே  பதவியை விட்டு விலகியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெ மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு