9 அமைச்சர்கள் ஆதரவு…விரைவில் ஆட்சி கைமாறும்…சொல்லி அடிக்கும் ஓபிஎஸ்…

 
Published : Mar 04, 2017, 08:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
9 அமைச்சர்கள் ஆதரவு…விரைவில் ஆட்சி கைமாறும்…சொல்லி அடிக்கும் ஓபிஎஸ்…

சுருக்கம்

press meet of ops

9 அமைச்சர்கள் ஆதரவு…விரைவில் ஆட்சி கைமாறும்…சொல்லி அடிக்கும் ஓபிஎஸ்…

சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கும் 9 அமைச்சர்கள் தங்கள் அணிக்கு வர உள்ளதாகவும், விரைவில் ஆட்சி கைமாறும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர் அவர் முதலமைச்சராக வேண்டும் என முயற்சி செய்ததால் ஓபிஎஸ் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

ஆனால் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதையடுத்து,பெருங் குழப்பம் ஏற்பட்டது. இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். சட்டப் பேரவையில் அவருக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தற்போது அமைச்சர்களாக உள்ள 9 பேர் சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவும்,அவர்கள் விரைவில் தமது அணிக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடுமையான நிர்பந்தத்தின் காரணமாகவே தற்போது அவர்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், விரைவில் ஆட்சி கைமாறும் என்றும் ஓபிஎஸ் அதிரடியாக தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு