"சசிகலா விடுதலையாக வேண்டும்" - நேர்த்திகடனாக கொடிமரம் கொடுத்த ஓ.பி.எஸ்

 
Published : Feb 13, 2017, 03:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
"சசிகலா விடுதலையாக வேண்டும்" - நேர்த்திகடனாக கொடிமரம் கொடுத்த ஓ.பி.எஸ்

சுருக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் விடுதலையாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு  முதல்வர் பன்னீர் செல்வம் தானமாக கொடுத்த கொடி மரம் கடந்த 6-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட மறுநாநாளில், சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது, கேரளவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு முதல்வர் பன்னீர் செல்வம் கொடிமரம் தானமாக கொடுத்து இருந்தார். இந்த கொடி மரம் கடந்த 6-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட மறுநாள் அதாவது 7-ந்தேதிதான் முதல்வர் பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து, சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடியைத் தூக்கினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா விடுதலை பற்றால் கொடிமரம் காணிக்கையாக கொடுப்பேன் என்று ஓ.பன்னீர் செல்வம் நேர்ந்திருந்தார். அந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானதையடுத்து, அந்த கொடிமரத்தை வாங்கிக்கொடுத்தார். ஏறக்குறைய 51 அடி உயரம் கொண்ட அந்த தேக்கு மரம், பொள்ளாச்சியில் இருந்து வாங்கப்பட்டது.

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக மூலிகை எண்ணெயில் ஊறவைக்கப்பட்டு இருந்த அந்த தேக்கு மரம், கொடிமரமாக கடந்த 6-ந்தேதி பகவதி அம்மன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.  இந்த கொடிமரம் ஏற்றப்பட்ட மறுநாள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்குஎதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!
தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!