8௦ கார்களோடு ராமேஸ்வரம் விரைகிறார் ஒபிஎஸ் ... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிர்ச்சி.....

Asianet News Tamil  
Published : Mar 11, 2017, 03:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
8௦ கார்களோடு  ராமேஸ்வரம் விரைகிறார் ஒபிஎஸ் ... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிர்ச்சி.....

சுருக்கம்

ops planning to go rameswaram by 80 cars

8௦ வண்டிகளோடு ராமேஸ்வரம் விரைகிறார் ஒபிஎஸ் ... உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிர்ச்சி.....

இலங்கை கடற்பகுதியில், சுட்டுக்கொள்ளப்பட்ட மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, 8௦ வண்டிகளோடு ராமேஸ்வரம் செல்ல முன்னாள் முதலவர்  ஒபிஎஸ்  திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த , மீனவர் பிரிட்ஜோ மரணத்திற்கு நியாயம் கேட்டு அப்பகுதி மீனவர்கள்  தொடர்ந்து  போராடி வருகின்றனர் . மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை  கைது செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என அறிவித்து விட்டனர். இந்நிலையில், இன்று காலை  திமுக செயல் தலைவர்  முக ஸ்டாலின், பிரிட்ஜோ  உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் .

ராமேஸ்வரம்  அரசு மருத்துவமனை  பிணவறையில்  வைக்கப்பட்டுள்ள , பிரிட்ஜோவின் உடலுக்கு ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின்  நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் . ஏற்கனவே  பல  கட்சிகளை  சேர்ந்த தலைவர்களும், அமைச்சர்களும் போராட்ட களத்திற்கு நேரில் சென்று வந்துள்ளனர் .

இதுவரை சென்ற தலைவர்களெல்லாம், ஆர்பாட்டமின்றி சென்று வந்தனர். ஆனால் அதிமுகவிற்கு  சிம்ம சொப்பனமாக விளங்கும், ஒபிஎஸ், 8௦ கார்கள் புடைசூழ, ராமேஸ்வரம் பகுதிக்கு செல்ல போவதாக அரசுக்கு உளவுத்துறை மூலமாக தகவல் கிடைத்துள்ளது .

உளவுத்துறையின்  இந்த தகவலையடுத்து , ஆளும் தரப்பு மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக  தெரிகிறது .

காரணம் படை பரிவாரங்களுடன்  செல்லும் ஒபிஎஸ் உடன் , முன்னாள்  மீன்வளத்துறை அமைச்சர்  கே.ஏ ஜெயப்பாலும்  உடன் செல்ல இருப்பதாக  தகவல்  கசிந்துள்ளது . ஏற்கனவே ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுடன்  நல்ல தொடர்பில் ஜெயப்பால் இருப்பதால் தேவையற்ற குழப்பத்தை  இவர்கள் மூலம்  ஏற்படக்கூடும் என அரசு தரப்பு அச்சப்படுவதாக கூறப்படுகிறது .

 

 

 

PREV
click me!

Recommended Stories

Vijay: வீட்டு டிபன் பாக்ஸ் சாப்பாடு! நோ மேக்கப்! டிரேட் மார்க் புன்னகையுடன் அசத்தும் முதல்வர் விஜய்!
ட்விஸ்ட்.! உதயநிதி எடுத்த சாட்டை.! பென் நிறுவனம் கலைப்பு?! மீண்டும் திமுகவில் மாமன் - மச்சான் அதிகார மோதல்.!