
பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு ஓபிஎஸ் அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே பத்திரிக்கையின் செய்தியாளர் பிரியம் வதாவுக்கு நேற்று பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சரும், புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓபிஎஸ், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிக்க அதிக வாய்ப்பிருக்கதாக தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ், ஜனாதிபதி தேர்லில் யாரை ஆதரரிப்பது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின்படி ஜனாதிபதி தேர்தலில் பாஜக அறிவித்துள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து ஓபிஎஸ் இன்று அல்லது நாளை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை நேரில் சந்தித்த தனது ஆதரவை தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.