அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் டிடிவி தினகரனை இன்று சந்தித்து பேச உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் ஆணையமும் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.
இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.இந்த நிலையில் தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று திருச்சியில் மாநாட்டை நடத்தினார் ஓபிஎஸ். திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நடத்தப்பட்ட முப்பெரும் விழா சிறப்பாக நடத்தப்பட்டது என்று ஓபிஎஸ் அணி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த மாநாடு தோல்வியில் முடிந்தது என்பதே உண்மை. வரிசையாக தோல்வியை சந்தித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 6ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசினார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி குறிப்பாக அதிமுக வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கியது என்றே சொல்லலாம்.
இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் டிடிவி தினகரனை இன்று சந்தித்து பேச உள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு யாரும் எதிர்பாராத சந்திப்பாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என மற்றவர்கள் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. டிடிவி தினகரனின் அடையாறு இல்லத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் பண்ருட்டி ராமச்சந்திரனும் கலந்து கொள்ள உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க..உங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்த மாதம் ரூ.436 எடுக்கப்படும்.. ஏன், எதற்கு தெரியுமா? முழு விபரம்
இதையும் படிங்க..குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்