எடப்பாடியை தொடர்ந்து ஆளுனரை சந்தித்தார் ஓபிஎஸ்

 
Published : Feb 19, 2017, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
எடப்பாடியை தொடர்ந்து ஆளுனரை சந்தித்தார் ஓபிஎஸ்

சுருக்கம்

கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஓ.பி.எஸ். முதலமைச்சராகவும், சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இதைதொடர்ந்து கடந்த 5ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர், சசிகலா அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ். தனி அணியை உருவாக்கினார். இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, இரண்டாக பிரிந்துள்ளது.

சசிகலா தரப்பினர், தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கவர்னரை வலியுறுத்தி வந்தனர். அதே நேரத்தில், அதிமுக எம்எல்ஏக்களை, சசிகலா தரப்பினர் மிரட்டி கடத்தி வைத்துள்ளதாகவும், சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய கூடாது எனவும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதனால், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, பதவி பிரமாணம் நடந்தது. அப்போது, 15 நாட்களுக்குள் தனிப்பெரும்பான்மை காட்ட வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடந்தது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். இதையொட்டி இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.

அப்போது, தன்னை முதலமைச்சராக ஆட்சி அமைக்க அழைத்ததற்கும், தனிப் பெரும்பான்மையை காட்ட ஒரு வாய்ப்பு அளித்ததற்கும் நன்றி கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், அதிமுகவின் மற்றொரு பிரிவின் தலைவரான முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தரப்பினர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது,எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்துடன், பி.எச்.பாண்டியன், செம்மலை, மைத்ரேயன், மதுசூதனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!
கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!