
தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்டவாரியாக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஓபிஎஸ் சசிகலா அணி என அதிமுக இரண்டாக பிளவு பட்ட நிலையில் தேர்தல் ஆணைய முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் நீதி கேட்டு பயணம் செய்ய ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார்.
அவருடன் இணைவதாக கூறி பேட்டி அளித்த தீபா திடீரென பினாவாங்கினார். ஆனாலும் ஓபிஎஸ் அணியில் எவ்வித பின்னடைவும் இல்லாமல்தொடர்ந்து அடுத்த கட்ட பணிகளை நோக்கி செயல்பட்டு வருகின்றனர்.
தனது பிரச்சார பயணத்துக்கு முன்னர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் கிருஷ்ணகிரி,தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று சேலம் மற்றும் சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தினார்.
ஓ.பி.எஸ் தலைமையிலான அணி கட்சியை பலப்படுத்தும் மற்றும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக நேற்று முதல் ஒவ்வொரு மாவட்டமாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணி தலைவர்கள் கே.பி. முனுசாமி செம்மலை , நத்தம் விஸ்வநாதன் , பி.எச்.பாண்டியன் , செம்மலை , மா.ஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.