களைகட்டிய ஒபிஎஸ் கூட்டம்... வெறிச்சோடிய எடப்பாடி சென்ற பாதைகள்

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 02:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
களைகட்டிய ஒபிஎஸ் கூட்டம்... வெறிச்சோடிய எடப்பாடி சென்ற பாதைகள்

சுருக்கம்

Jayalalitha asked to investigate the death of the righteous

ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டு , ஒபிஎஸ் அணியினர் தமிழகம்  முழுவதும்  உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இடங்களிலெல்லாம் ,  கூட்டம்  அலைமோதுகிறது .

கிருஷ்ணகிரி ,ஆவடி, திருச்சி, நாமக்கல்,மதுரை, சேலம் உள்ளிட்ட இடங்களில் 2௦ ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டதால், மாற்று அணியினருக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க, சசிகலா அணியை சேர்ந்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி  நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை  வழங்குவதற்காகவும் புதிய திட்டங்களை துவங்கி வைப்பதற்காக வருகை தந்தார் .

மதுரையிலிருந்து, நெல்லை வந்து அங்கிருந்து பாளையங்கோட்டையில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார் எடப்பாடி. திருநெல்வேலியிலிருந்து பாளையங்கோட்டை வரை, பொதுமக்களால்  இடையூறு  ஏற்படாத வண்ணம் இருக்கவும்,  கூட்டம் அதிகமாக  கூடினால்  சமாளிக்கவும்  மூங்கில்  மற்றும் சவுக்கால்  தடுப்புகள் கட்டப்பட்டிருந்தன .

ஆனால் போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல், எடப்பாடி சென்ற சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன .

மாறாக அதிமுக தொண்டர்கள் பெரும்பாலோனோர் ஒபிஎஸ் அணியினர்  நடத்தும்   உண்ணாவிரதத்திற்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

முதலமைச்சரின்  வருகையை அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தும் ,நகர்புரத்தில் கூட மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளிக்கப்படாததால் அதிமுகவின் ஆளும் தரப்பு பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?