"அப்பல்லோவில் கேமராக்களை முடக்க செய்தது யார்...?" - மாபா பாண்டியராஜன் கேள்வி

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 01:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
"அப்பல்லோவில் கேமராக்களை முடக்க செய்தது யார்...?" - மாபா பாண்டியராஜன் கேள்வி

சுருக்கம்

mafoi pandiarajan pressmeet apout jaya death

ஜெயலலிதாவின் மறைவில் நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடந்து வருகிறது.

இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், மாநிலம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இதையொட்டி ஆவடியில், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், தலைமையில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது. இதில், மாபா பாண்டியராஜன் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவில் உள்ள சந்தேகத்தை நீதி விசாரணை நடத்தி, மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த சிறப்பு பாதுகாப்பு போலீசாரை யார் வெளியேற்றியது என்பதை அறிய வேண்டும். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை, இயக்க கூடாது என யார் உத்தரவிட்டது என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

மக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகளவில் உள்ளது. இதனால், எங்களின் பலத்தை கண்டு, எதிர் அணியினர் அஞ்சுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?