2 நாளில் ஓ.பி.எஸ். வீட்டை காலி செய்ய அதிரடி உத்தரவு - எடப்பாடி அரசு நெருக்கடி

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 02:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
2 நாளில் ஓ.பி.எஸ். வீட்டை காலி செய்ய அதிரடி உத்தரவு - எடப்பாடி அரசு நெருக்கடி

சுருக்கம்

Chennai in the state of the road kirinves empty bungalow 2 days to give an answer to the letter sent by the Public Works Department to ops

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவை 2 நாட்களுக்குள் காலி செய்து கொடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ்.ஸுக்கு பொதுப்பணி துறை உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து, அமைச்சரனார் ஓ.பி.எஸ். அப்போது முதல் தற்போது வரை தென்பெண்ணை என பெயரிடப்பட்ட அரசு பங்களாவில் குடியிருந்து வருகிறார்.
அங்கு சுமார் 6 காங்கிரேவ் எனப்படும் குஜராத்தை சேர்ந்த நாட்டு பசு மாடுகளையும் வளர்த்து வந்தார். இந்த நிலையில், ஓ.பி.எஸ்சை நெருக்கடி கொடுத்து வீட்டை காலி செய்ய சொல்கின்றனர். பொதுப்பணி துறை செயலாளர் பிரபாகர் மூலமாக ஓ.பி.எஸ்.க்கு
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், இன்னும் 2 நாட்களுக்குள் வீட்டை காலி செய்தே ஆகவேண்டும் என நெருக்கடி கொடுப்பதால், போய்ஸ் கார்டன் பின்பறம் உள்ள வீனஸ் காலனிக்கு குடியேறுகிறார் ஓ.பி.எஸ்.
பொதுவாக அரசு விதிகளின்படி, பதவி இழந்த முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ அடுத்த இடத்துக்கு குடியேறும் வரை தேவையான 6 மாதகால அவகாசம் அளிக்கப்படும். ஆனால், ஓ.பி.எஸ்.க்கு முன்னாள் முதலமைச்சர் என்று கூட பாராமல் நெருக்கடி
கொடுக்கப்படுகிறது.
இதற்கு முன்பு முதலமைச்சர்களாக இருந்த எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அரசு இல்லங்களை பயன்படுத்தியது இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். ஏற்கனவே, அமைச்சராக இருந்த பச்சைமால், மத்திய அமைச்சரவையில்
இருந்த தம்பிதுரை ஆகியோர் வாடகை அளித்து கொண்டு அரசு இல்லங்களில் தங்கி இருந்தனர். அதுபோன்றதொரு சலுகை அளிக்கவும் சட்டத்தில் இடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக ஓ.பி.எஸ். நெருக்கடிக்கு ஆளாகிறார் என குமுறுகிறார்கள் என அவரது ஆதரவாளர்கள்.

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?